
விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் நடிகை ஸ்ரீலீலா உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கால்ஷீட் பிரச்சினையால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது . இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஹரி இயக்கத்தில் யானை படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.