சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றவர் பிரியா ராஜன். அதிலும் இளம் பெண்ணாக படித்து கொண்டே கட்சி பணிகளை தொடங்கியவர். வடசென்னையில் இருந்து வந்து சென்னை மாநகரின் அதிகாரமிக்க பதவியை அலங்கரிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அதற்கு திமுகவின் சமூக நீதி அரசியல் முக்கியமான ஒன்றாகும். ஸ்டாலின் பதவி வகித்த அதே இடத்தை தற்போது பிரியா ராஜன் பிடித்திருப்பது சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னை மேயர் பிரியா ராஜன்தனது சுறுசுறுப்பான செயல்பாட்டால் குறுகிய காலகட்டத்தில் சென்னை மக்கள் மனதில் இடம்பிடித்தவர். ஓராண்டை கடந்து வெற்றிகரமாக களப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் சிங்கார சென்னை 2.0, மாநகர் முழுவதும் உள்ள இலவச கழிவறை மேம்பாடு, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பில் புதிய திட்டங்கள், புதிய பூங்காக்கள், சுகாதார மையங்கள் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்றன.ஸ்டாலின் அறிமுகம் செய்த திட்டங்கள்குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்த திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆட்சிக்கு வந்த பின்னர், இதனை மாற்றி ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என மாற்றினார்.மக்களை தேடி மேயர்இதுதவிர மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்டவை பெரிதும் கவனம் பெறக்கூடிய திட்டங்களாக பார்க்கப்பட்டது. இதே பாணியில் மக்களுக்கு நேரடியாக சென்று பயனளிக்கும் வகையில் ’மக்களை தேடி மேயர்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து ஒவ்வொரு வார்டாக செயல்படுத்தி வருகிறார்.வெளிநாட்டு சுற்றுப்பயணம்தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டாலினை பின்பற்றி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தயாராகி உள்ளார்.திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம்திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தும் வகையில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த பயணத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் ஐஏஎஸ், தலைமை பொறியாளர் என்.மகேசன், செயற்பொறியாளர் விஜய் அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவர் எனத் தெரிகிறது.முதலமைச்சரிடம் வாழ்த்துஇந்நிலையில் தங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சிறப்பாக அமையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே மேயர் பிரியா மிஞ்சி விடுவார் போலிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். எப்படியோ, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்தகட்டத்திற்கு செல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.