இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு நேற்று இரவு வன்முறையாளர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த போது அமைச்சர் வீட்டில் இல்லை.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே 3 முதல் நீடிக்கும் கலவரம் காரணமாக இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இம்பாலில் , மாநில அமைச்சர் நெம்சாவிற்கு சொந்தமான வீட்டிற்கு மர்ம கும்பல் ஒன்று தீவைத்து எரித்தனர். தொடர்ந்து நியூ செக்கான் பகுதியில் உள்ள வீடுகளையும் மற்றொரு கும்பல் நேற்று தீ வைத்து எரித்தது. இதனால், அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மாநில தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து, வீட்டின் அனைத்து பக்கங்களிலும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, வீட்டிற்கு தீவைத்து எரித்தனர். சம்பவம் நடந்த போது, அமைச்சர் வீட்டில் இல்லை. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement