மங்களூரு:இரு சக்கர வாகனத்துக்கான தொகையை, 10 ரூபாய் நாணயங்களை செலுத்தி ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 10 ரூபாய் நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக, வதந்தி பரவியது. இதை ரிசர்வ் வங்கி மறுத்தது. ஆனாலும் கடைகளில், 10 ரூபாய், நாணயங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து ஒரு பெண், இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளார். உடுப்பி குந்தாப்பூரில் வசிப்பவர் ரூபினா பேகம், 28. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக கோட்டேஸ்வர் அங்கதகட்டேயில் உள்ள, ஷோரூம் சென்றார். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஸ்கூட்டரை முன்பதிவு செய்தார்.
நேற்று டெலிவரி எடுக்க சென்றார். அப்போது, 1 லட்சம் ரூபாய்க்கு, 10 ஆயிரம் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்தார்.
இதை ஷோரூம் ஊழியர்களும் வாங்கி கொண்டனர். ஊழியர்கள் நாணயங்களை எண்ணினர். அவர்களுக்கு ரூபினா பேகமும் உதவி செய்தார். நாணயங்களை எண்ணிய பின்னர், ஸ்கூட்டரை வாங்கி சென்றார். தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது என்று, ஷோரூம் ஊழியர்கள் கூறினர்.
ரூபினா வழங்கிய நாணயங்களின் எடை 80 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement