சென்னை: Adipurush Revies (ஆதிபுருஷ் விமர்சனம்) பிரபாஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் குறித்து ட்விட்டர்வாசிகள் தங்களது விமர்ச்னத்தை முன்வைத்துவருகின்றனர்.
இந்திய அளவில் பிரபலமான நடிகராக விளங்கும் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஓம் ராவத் இயக்கியிருக்கும் படத்தில் சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு பெரும்பாலான ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சொதப்பிய கிராஃபிக்ஸ்: படத்திலிருந்து முதல் டீசர் வெளியானபோது ரசிகர்கள் அதை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக படத்தின் க்ராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இல்லை என கூறியதை அடுத்து கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணியில் இறங்கியது படக்குழு. இதன் காரணமாக ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனது. கிராஃபிக்ஸுக்கான வேலையை முடித்த பிறகு இரண்டு ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. இரண்டு ட்ரெய்லர்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.
அனுமனுக்கு சீட்: இப்படிப்பட்ட சூழலில் ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்தது. ஏற்கனவே கிராஃபிக்ஸ் காட்சிகளை கழுவி ஊற்றிக்கொண்டிருந்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் படக்குழுவின் இந்த அறிவிப்பையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இருந்தாலும் எடுத்த முடிவில் ஆதிபுருஷ் படக்குழு உறுதியாக நின்றது.
படம் ரிலீஸ்: படக்குழு அறிவித்தபடி படமானது இன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு திரையரங்குகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் முன்வைத்து வருகின்றனர். அதனை பார்க்கலாம்.
கார்ட்டூன் கிராஃபிக்ஸ்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு சென்றிருப்பார் போல. படத்தை பார்த்த இந்த ரசிகர் கார்ட்டூன் கிராஃபிக்ஸ். ராமராக பிரபாஸ் செட் ஆகவில்லை. சீதாவின் அப்பாவித்தனத்தையும், துணிச்சலையும் காட்ட இயக்குநர் ஓம் ராவத் தவறிவிட்டார். ஒட்டுமொத்தமாக ஆதிபுருஷ் படம் சராசரிதான். ஒருமுறை பார்க்கலாம் என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

அருமையான புதல் பாதி: முதல் பாதி அருமையாக இருக்கிறது. பல எமோஷனல் தருணங்கள் இருக்கின்றன. பிரபாஸின் அறிமுக காட்சி, சபரி காட்சி, பஜரங் காட்சிகள் படத்துக்கு ஹைலைட்டாக இருக்கின்றன. குறிப்பாக பிரபாஸின் ஸ்க்ரீன் பிரஸென்ஸ் மிக அருமையாக இருக்கிறது என இந்த ரசிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஎஃப் எக்ஸ் மோசம்: சிறந்த இசையோடு நன்றாக இருக்கிறது. ஆனால் விஎஃப் எக்ஸ் மோசமாக உள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள். அதில் ஒரு மனிதன் கார்ட்டூன்களுடன் சண்டை போடுவது போல் இருக்கிறது. இரண்டாம் பாதி நன்றாக அமைந்திருக்கிறது என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறப்பான முதல் பாதி: முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாவது பாதி சராசரியாக இருக்கிறது. இந்தக் காலத்திற்கேற்ப ராமாயணத்தை வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் விஎஃப் எக்ஸில் பிரபாஸை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஆனால் மனம் அதற்கு முன்பே தயாராகிவிட்டது என வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய முயற்சி: கதையின் அடிப்படையில் நீங்கள் ராமாயணத்தை தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. ராமாயணத்தை முழுமையாக நவீனப்படுத்திய இயக்குநர் புதிய ஒன்றை முயற்சித்துள்ளார். அது இந்த தலைமுறையிடம் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாராயணா என்ன கிராஃபிக்ஸ் இது: படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சியை செல்ஃபோனில் படம் பிடித்து,என்ன கிராஃபிஸ் இது நாராயணா என இந்த ரசிகர் தனது குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ராவணனை என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என வேதனையுடன் கேட்கிறார் அடுத்த ரசிகர். இப்படி ஆதிபுருஷ் படத்துக்கு ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன