ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரிட்டி சனோன் உள்ளிட்டோர் நடித்த ஆதிபுருஷ் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.
ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருக்கிறார் பிரபாஸ்.
இந்நிலையில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த வாலிபர் ஒருவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது,
ஆதிபுருஷ் படத்தில் ஒன்னுமே இல்லை. பி.ஜி.எம்., 3டி ஷாட்ஸ் மட்டும் தான் நன்றாக இருக்கிறது. பிரபாஸுக்கு ராமர் கதாபாத்திரம் பொருத்தமாக இல்லை. பாகுபலி படத்தில் அவரை பார்த்தபோது ராஜா மாதிரி கம்பீரமாக இருந்தார். ஆனால் ஆதிபுருஷில் அவரை பார்த்தால் ராமர் போன்று இல்லை.
படத்தில் எதுவுமே இல்லை என்றார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw/sections/CAQqEAgAKgcICjDzhqkLMOWRwQMw8NzTBw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata
அவர் ஆதிபுருஷ் படத்தை விமர்சித்துக் கொண்டிருந்தபோது அதை கேட்டு அங்கிருந்த பிரபாஸ் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். நிஜமாகவே படம் பார்த்துவிட்டுத் தான் பேசுகிறாயா, ஹவுஸ்ஃபுல்லாக போகும் படத்தை இப்படியா விமர்சிப்பாய் என பிரபாஸ் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள்.
அதை கேட்ட வாலிபரோ, நான் படத்தை பார்த்துவிட்டு தான் சொல்கிறேன். நிஜமாகவே படத்தில் எதுவுமே நல்லா இல்லை என்றார். இதை கேட்டதும் பிரபாஸ் ரசிகர்கள் மேலும் கோபம் அடைந்து அந்த வாலிபரை தாக்கினார்கள்.
அந்த வாலிபர் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அந்த வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
இரண்டாம் பாதியை பார்த்து முடிப்பதற்குள் தலைவலியே வந்துவிட்டது. பிரபாஸுக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இல்லை. அந்த வாலிபர் சொன்னதில் தவறு இல்லை. விமர்சித்தால் கூட பிரபாஸ் ரசிகர்கள் அடிக்கிறார்களே. இது மோசமான செயல் ஆகும். இந்த விஷயம் பிரபாஸுக்கு தெரிய வந்தால் நிச்சயம் வருத்தப்படுவார்.
படம் நல்லா இருக்கு, இல்லை என்று சொல்கிற உரிமை படம் பார்ப்பவர்களுக்கு இருக்கிறது என்பது பிரபாஸுக்கு தெரியும். ரசிகர்களின் கருத்தை மதிப்பவர் அவர். அவரின் பெயரை ரசிகர்கள் கெடுக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆதிபுருஷ் படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு திடீரென குரங்கு வந்து படம் பார்த்தது. குரங்கை பார்த்த ரசிகர்களோ ஜெய் ஸ்ரீராம் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
ராமரை பற்றிய படத்திற்கு அனுமானின் ஆசி கிடைத்துவிட்டதாக பிரபாஸ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Adipurush: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்த குரங்கு..வைரலாகும் வீடியோ..!
ஆதிபுருஷ் படம் ஓடும் தியேட்டர்கள் அனைத்திலும் ஒரு இருக்கை அனுமானுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறது படக்குழு. இந்நிலையில் தான் குரங்கு ஒன்று படம் பார்க்க வந்திருக்கிறது. ஆதிபுருஷ் படத்தில் தேவ்தத் நாகே தான் அனுமானாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிபுருஷ் படம் குறித்து கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்கள். படத்தை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸ் செய்வோம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது. இதையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ரிலீஸாகும் என்று போஸ்டர் வெளியிட்டனர்.
பின்னர் ஒரு வழியாக இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது.