Adipurush Review: என்னாது ஒன்றரை ஸ்டாரா? பிரபாஸின் ஆதிபுருஷை அசிங்கப்படுத்திய பாலிவுட் விமர்சகர்!

சென்னை: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பல நூறு கோடி பட்ஜெட் ராமாயணக் கதைக்கு வெறும் ஒன்றரை ஸ்டார் ரேட்டிங் தான் போட முடியும் என ப்ளூ சட்டை மாறனை விட கறாராக விமர்சித்துள்ளார் பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ்.

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தவிர தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் புக்கிங்கே இல்லாமல் படு தோல்வியை சந்தித்துள்ளது.

வட மாநிலங்களில் புக்கிங் நடந்தாலும், படத்தை பார்த்த பலரும் 3 மணி நேரம் வச்சு செஞ்சிட்டாங்க ப்ரோ என கத்தி கதறுகின்றனர்.

பிரம்மாண்ட சொதப்பல்: பிரபாஸ் ஹீரோவாக நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்களே ஃபிளாப் ஆகி வந்த நிலையில், பிரபாஸ் அனிமேஷனாக நடித்துள்ள லைவ் ஆக்‌ஷன்படமான ஆதிபுருஷ் படம் பிரம்மாண்ட சொதப்பல் என்றும் சிஜி மிரட்டலுக்காகத் தான் அந்த படத்தை பார்க்கவே முடியும். ஆனால், அதுவே சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றும் இயக்குநர் ஓம் ராவத் கிடைத்த பிரம்மாண்ட ஸ்டார் காஸ்டிங்கை வீணடித்து விட்டார் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

3 மணி நேரம் மூச்சுத் திணற திணற: தியேட்டருக்கு சென்று விட்டு வெளியே வந்தவர்கள் எல்லாம் மூன்று மணி நேரம் ராம தரிசனத்தை கண்டோம் என்கிற கூஸ்பம்ப்ஸ் உடன் வெளியே வராமல் ஆள விடுடா ராமா என அலறிக் கொண்டு வருகின்றனர்.

Adipurush Review: Taran Adarsh gives  DISAPPOINTING rating to Prabhas starrer epic movie

படத்தில் பிரபாஸ் ஹீரோவா அந்த அனுமார் நடிகர் ஹீரோவான்னே தெரியல, படம் முழுக்க அனுமார் தான் சீதா தேவியை காப்பாத்த போராடுறாரு, பிரபாஸ் எதுவுமே பண்ணல என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ராஜாவாக பிரபாஸ் மீசையை எல்லாம் வைத்துக் கொண்டு வருவது எல்லாம் இவரா ராமர்? என்றே கேட்க வைக்கிறது என கிண்டலடித்துள்ளனர்.

ஒன்றரை ஸ்டார் ரேட்டிங்: இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல விமர்சகர் தரன் ஆதர்ஷ் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வெறும் ஒன்றரை ஸ்டார் ரேட்டிங் கொடுத்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

ஒரு வார்த்தை விமர்சனத்தில் DISAPPOINTING என பதிவிட்டுள்ள தரன் ஆதர்ஷ், பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களை வைத்துக் கொண்டு இப்படியொரு மோசமான படத்தைக் கொடுக்க ஓம் ராவத்தால் மட்டுமே முடியும் என விளாசி உள்ளார்.

திட்டும் பிரபாஸ் ரசிகர்கள்: பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை கழுவி ஊற்றி உள்ள நிலையில், பாலிவுட் நடிகர்கள் படங்களுக்கு மட்டும் காசு வாங்கிக் கொண்டு நல்ல விமர்சனம் கொடுப்பீங்க, பிரபாஸ் படம் என்றால் மற்ற நடிகர்களிடம் காசு வாங்கிக் கொண்டு தப்பான விமர்சனத்தை கொடுப்பீங்க என தரன் அதர்ஷை வாய்க்கு வந்தபடி திட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.