‘பாகுபலி’ படத்திற்கு பின் பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. கடந்த சில வாரங்களாகவே இந்தப்படத்தின் ரிலீசுக்கான பணிகள் படு ஜோராக நடந்து வந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் குவிந்து வரும் விமர்சனங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ‘ஆதிபுருஷ்’ படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ படம் உருவாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ டீசர் வெளியான போதே ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது. விஎப்எக்ஸ் படு சுமாராக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதனையடுத்து கிராபிக்ஸ் குறைபாடுகளை சரி செய்யும் பணிகளில் படக்குழு இறங்கியது. இதனால் ஜனவரியில் ரிலீசாக வேண்டிய படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
Leo: ‘லியோ’ படத்திலிருந்து வெளியாகும் பர்ஸ்ட் அப்டேட் இதுதானாம்: தளபதி ரசிகாஸ் ரெடியா.?
இந்நிலையில் இன்று பல மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளுடன் ‘ஆதிபுருஷ்’ படம் துவங்கியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலர் படம் குறித்து தங்களின் விமர்சனங்களை ட்விட்டரில் குவித்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி அருமையாக இருப்பதாகவும், பிரபாஸின் ஸ்கிரீன் பிரசென்ஸ் அருமையாக இருக்கிறது எனவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஆதரவற்ற நிலையில் இறந்த தனுஷ் பட நடிகர்: இறுதி சடங்குகளை செய்த டி. இமான்.!
அதே நேரம் படத்தின் மிகப்பெரிய குறையாக விஎஃப் எக்ஸ் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். படத்திற்கு முக்கியமான சண்டை காட்சிகள் சுமாரான கிராபிக்ஸ் காரணமாக சொதப்பியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராமாயணத்தை அறிய இந்தப்படம் உதவும் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இவ்வாறு கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது ‘ஆதிபுருஷ்’ படம்.