ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அஜித்தின் விடாமுயற்சிதுணிவு படத்திற்கு பிறகு அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படம் பல இழுபறிகளை கடந்து தற்போது ஒரு வழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமலே இருக்கின்றது. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
என்ன பிரச்சனை ?அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமாகிக்கொண்டே செல்கின்றது. படத்தின் முழு கதையையும் மகிழ் திருமேனி தயார் செய்துள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனம் ரெய்டில் சிக்கியது. எனவே இதன் காரணமாக தான் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருவதாக தகவல்கள் வருகின்றன. மேலும் விடாமுயற்சி படம் கைமாறவும், கைவிடப்பட வாய்ப்புள்ளதாகவும் இவ்வாறு பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும், இப்படம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் கூறி வருகின்றனர்
ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள்தற்போது விடாமுயற்சி படத்தை பற்றி பரவும் வதந்திகளுக்கு அஜித் மற்றும் மகிழ் திருமேனி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி தீவிரமாக இறங்கியுள்ளனர். அஜித் லுக் டெஸ்ட்டிற்காக மகிழ் திருமேனியுடன் லண்டனுக்கு சென்றுள்ளார். மேலும் படத்தின் லொகேஷன் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளார் அஜித். எனவே விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துவங்க தீவிரம் காட்டி வருகின்றார் அஜித். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தயாரிப்பாளர் அஜித் ?இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித் எதிர்காலத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது நடிப்பு மற்றும் பைக் சுற்றுலா என செம பிசியாக இருக்கும் அஜித் எதிர்காலத்தில் ஆவணப்படங்களை தயாரிக்கும் ஐடியாவில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அஜித் பைக் சுற்றுலா சென்றதை ஒரு ஆவணப்படமாக எடுக்க அவர் திட்டம் போட்டிருப்பதாக செய்திகள் வைத்தன. மேலும் இப்படத்தை அவரே இயக்குவதாகவும் தகவல்கள் வந்தன. இதையடுத்து தற்போது அஜித் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப்போவதாக வந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது