நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இந்தியா பெரிய சந்தையாக மாறியுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் அதிக சந்தாதாரர்களின் தளத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் கொண்டு வருகின்றன. பல வித புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் மிகவும் முயற்சி செய்கின்றன. இந்த முயற்சியில் அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் கடும் போட்டியும் நிலவுகின்றது.
இதற்கிடையில், அமேசான் இந்தியாவில் புதிய அமேசான் ப்ரைம் லைட் (Amazon Prime Lite) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரைம் லைட் பதிப்பின் விலை ஜெனரல் பிரைம் மெம்பர்ஷிப்பை விடக் குறைவான விலை கொண்டது. இரண்டிலும் பயனர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களைப் பெறுகிறார். இருப்பினும், வழக்கமான பிரைம் மெம்பர்ஷிப்பில், பயனர்கள் சில சிறப்பு வசதிகளையும் பெறுகின்றனர், அவை பிரைம் லைட்டில் கிடைக்காது. அமேசானின் புதிய அமேசான் பிரைம் லைட் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அமேசான் பிரைமை விட பிரைம் லைட் எவ்வளவு மலிவானது?
அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos ) இந்தியாவில் பல சந்தா திட்டங்களை வழங்குகிறது. இதன் மாதாந்திர திட்டம் ரூ.299 -க்கு வருகிறது. இதில் பிரைமின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அதே நேரத்தில், ரூ. 599 -க்கான ஒரு காலாண்டுத் திட்டம் உள்ளது. இதில் பயனர் ரூ. 78 சேமிக்கலாம். பயனர்களுக்கு இதில் ரூ.299 பேக்கில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இதில், ரூ.1499 -கான ஆண்டுத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைப்பதுடன் ரூ. 337 சேமிக்கப்படுகிறது.
மறுபுறம், பிரைம் லைட்டின் வருடாந்திர திட்டம் 999 ரூபாய்க்கானது. இது Amazon Music தவிர மற்ற அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ளது. மொபைலில் வருடாந்தரத் திட்டத்திற்கான தொகை வெறும் ரூ. 599 மட்டுமே ஆகும். இது நிலையான தெளிவுத்திறன் ஸ்ட்ரீமிங் மற்றும் அமேசான் மியூசிக் போன்ற வரையறுக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. வழக்கமான திட்டத்துடன் ஒப்பிடுகையில், 900 ரூபாய் மலிவானது. பிரைம் லைட்டில், பயனர்களுக்கு Amazon Originals, Live Cricket, Movies, IMDb -ன் X-ray மற்றும் ஆஃப்லைன் பதிவிறக்கங்கள் ஆகியவை கிடைக்கும்.
இந்த நன்மைகள் கிடைக்கும்
அமேசான் பிரைம் லைட் மெம்பர்ஷிப்புடன் இரண்டு நாட்கள் இலவச மற்றும் நிலையான டெலிவரி (ஃப்ரீ அண்ட் ஸ்டாண்டர்ட் டெலிவரி) கிடைக்கும். இது தவிர, நோ-ரஷ் ஷிப்பிங்கிற்கு ரூ.25 கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, மெம்பர்ஷிப் பெறும் பயனருக்கு Amazon Pay ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டில் இருந்து வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். டிஜிட்டல் மற்றும் கிஃப்ட் கார்டுகளை வாங்கினால், 2 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.
உறுப்பினர்கள் வரம்பற்ற வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இதில் பயனர்களுக்கு HD தரம், இரண்டு சாதனங்களில் பிரைம் வீடியோவைப் பார்ப்பதற்கான சுதந்திரம் மற்றும் லைட்னிங் டீல்ஸ், பிரைம் எக்ஸ்ளூசிவ் டீல்ஸ், டீல்ஸ் ஆஃப் தி டே ஆகிய நன்மைகள் உட்பட இன்னும் பல நன்மைகளும் கிடைக்கும்.