BSNL Broadband Plans: ரூ.329 முதல் 1TB டேட்டா உடன் BSNL அளிக்கும் பிராட்பேண்ட் திட்டங்கள்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியா தற்போது முழுமையாக டிஜிட்டல் யுகத்திற்குள் சென்றுவிட்டது. மக்களுக்கு தினசரி வேலைகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் இணையதளம் தேவைப்படுகிறது. அதில் விலை குறைந்த சில Fiber Broadband திட்டங்களை BSNL நிறுவனம் வழங்கிவருகிறது. அதன் முழு பட்டியலை காணலாம்.

329 ரூபாய் திட்டம்

இதன் மூலம் 20MBPS வரை இணைய வேகம் கிடைக்கும். மாதம் நமக்கு 1TB வரை டேட்டா கிடைக்கும். 1TB டேட்டா தாண்டி நாம் இணையத்தை பயன்படுத்தும்பட்சத்தில் 4MBPS என்ற அளவிற்கு வேகம் குறைந்துவிடும். இதனுடன் பயனர்களுக்கு இலவசமாக Landline கனெக்ஷன் கிடைக்கும்.

Amazon Prime Lite 999ரூ சந்தா திட்டம் இந்தியாவில் அறிமுகம்!

399 ரூபாய் திட்டம்

இதில் 30 MBPS வரை இணைய வேகம் கிடைக்கும். இதிலும் நமக்கு 1TB வரை மாத டேட்டா கிடைக்கும். அதன் பிறகு இணைய வேகம் 4MBPS என்ற அளவிற்கு குறைந்துவிடும். இதிலும் நமக்கு இலவசமாக Landline வசதி கிடைக்கும்.

449 ரூபாய் திட்டம்

இந்த திட்டத்தில் மாதம் 3.3 TB வரை டேட்டா கிடைக்கிறது. இதில் 30MBPS வரை இணைய வேகம் கிடைக்கும். மேலும் 3.3 TB டேட்டா வரை நாம் பயன்படுத்தாவிட்டால் அதன் பிறகு 4MBPS என்ற அளவிற்கு இணைய வேகம் குறைந்துவிடும்.

Vi prepaid plans: சிறந்த ப்ரீபெய்டு திட்டங்கள் என்ன? உங்களுக்கான பெஸ்ட் திட்டம் எது?

499 ரூபாய் திட்டம்

இதில் 40MBPS வரை வேகத்தில் 3.3TB டேட்டா பயன்படுத்தலாம். இதிலும் 3.3TB டேட்டா முழுவதையும் நாம் பயன்படுத்தியவுடன் வேகம் 4 MBPS அளவிற்கு குறைந்துவிடும். அனைத்து திட்டங்களுடன் இலவசமாக Landline கனெக்ஷன் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.