சென்னை: கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்கவிருந்தார் கமல்ஹாசன்.
ஆனால், தற்போது H வினோத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் கதையும் கமலுடன் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் குறித்தும் தெரியவந்துள்ளன.
கமல் – H வினோத் கூட்டணியில் இன்னொரு பிரபலம்:விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தூசு தட்டினார் கமல். ஷங்கரும் ரெடியாக இருந்ததால், இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியாக மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்க கமிட்டானார் கமல். மணிரத்னம், கமல், ஏஆர் ரஹ்மான் என பிரம்மாண்ட கூட்டணியில் KH 234 உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே கமல் நடிக்கவிருக்கும் KH 233 படம் பற்றி மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை H வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இது கன்ஃபார்ம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கமல் – ஹெச் வினோத் இணையும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக விஜய் சேதுபதியையும் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என KH 233 படக்குழு முடிவு செய்துள்ளதாம். கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
அதனால் KH 233 படத்திலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், இப்படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாம். விவசாயிகளின் வாழ்வாதாரம், இயற்கை விவசாயம் என பல சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்குகிறார் ஹெச் வினோத். அதற்காக அவரும் கமலும் சேர்ந்து ஸ்க்ரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்துள்ளாராம்.
இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தை விவசாயத்தை பின்னணியாக வைத்து இயக்கலாம் என்ற முடிவில் இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால், தற்போது அதே ஜானரில் தான் கமலின் KH 233 படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லைகா தயாரிக்கும் ஏகே 62 படம் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.