நடிகர் விஜய் தனது 49 வது பிறந்தநாளை வரும் ஜுன் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். விஜய்யின் ஒவ்வொரு பர்த்டேவுக்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்குதோ இல்லையோ அவர் நடிக்கும் படங்களின் அப்டேட் கட்டாயம் கிடைக்கும். அந்த வகையில் விஜய்யின் இந்த வருட பிறந்தநாளுக்கு ‘லியோ’ படத்திலிருந்து என்ன அப்டேட் வெளியாகும் என கடந்த சில வாரங்களே சோஷியல் மீடியாவில் பல்வேறு யூகங்கள் கிளம்பி வந்தன.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்நிலையில் ‘லியோ’ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் சில மணி நேரங்களுக்கு முன்பாக ரெடியா? என ஒரு ட்வீட் ஒன்று போட்டார். இதனையடுத்து தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் குவிய ஆரம்பித்தனர். என்ன அப்டேட் வெளியாக போகிறது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இதனையடுத்து விஜய் பிறந்தநாளுக்கு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக போவதாக புதிய போஸ்டருன் படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
துப்பாக்கி மற்றும் சிகரெட்டுடன் விஜய் கொல மாஸ் லுக்கில் இருக்கும் இந்த புதிய போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘நான் ரெடி’ என துவங்கும் இந்தப்பாடல் வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதனை தற்போது சோஷியல் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கோலிவுட் சினிமா பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்து முடிந்தது.
Leo: ‘லியோ’ படத்திலிருந்து வெளியாகும் பர்ஸ்ட் அப்டேட் இதுதானாம்: தளபதி ரசிகாஸ் ரெடியா.?
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்க்காக ஒருசில காம்ப்ரமைஸ் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதனால் அவர் சில விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால் ‘லியோ’ படத்தினை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், திரிஷா கூட்டணி இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Adipurush Twitter Review: ‘ஆதிபுருஷ்’ படம் எப்படி இருக்கு.?: ட்விட்டர் விமர்சனம் இதோ.!