விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. விஜய் படங்களுக்கு எப்போதும் இருக்கும் எதிர்பார்ப்பை விட கூடுதலாகவே இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவின் தற்போதைய பிசியான இயக்குனரான இவர் தற்போது ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் அப்பா, மகன் செண்டிமென்டில் பேமிலி டிராமாவாக இந்தப்படம் வெளியானது. வசூல்ரீதியாக இந்தப்படம் வரவேற்பை பெற்றாலும் விஜய் ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து தான் தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகி வரும் லியோவில் நடித்து வருகிறார் விஜய்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். ‘மாஸ்டர்’ படம் லோகேஷ் பாணியில் இல்லை என சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ‘லியோ’ படத்தினை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடத்தி முடித்தனர் படக்குழுவினர்.
தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜுன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. மேலும் கமல் இந்த வீடியோவிற்கு வாய்ஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் இந்த தகவல் வதந்தி எனவும் ஒருசில சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
Vijay Sethupathi: கேட்டதும் ஒப்புக்கொண்டார்.. விஜய் சேதுபதிக்கு நன்றி கூறிய திண்டுக்கல் லியோனி.!
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற ஜுன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் சிங்கிள் டிராக் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
‘லியோ’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ரிக் கூட்டணியின் படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்: அடுத்த ஹிட் ரெடி.!