ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த ஆறு மாதகாலமாக எங்கு திரும்பினாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் விஜய் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே லியோ படத்தை பற்றி ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். இதை கவனித்த தளபதி லியோ படத்தினால் வாரிசு படத்தின் மவுசு குறைந்துவிடுமோ என எண்ணி, லியோ படத்தின் அறிவிப்பை வாரிசு படம் வெளியான பின்னரே தான் அறிவிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.
அதைப்போல கடந்த ஜனவரி மாதம் லியோ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு படக்குழு படப்பிடிப்பை துவங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் இதையடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக துவங்கவுள்ளது.
லியோ ஷூட்டிங் ஸ்பாட்
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அநேகமாக லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Vijay: விஜய்யை பார்த்தல் இந்த கேள்வியை தான் கேட்பேன்..தன் ஆசையை சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்..!
இது ஒருபக்கம் இருக்க தற்போது லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான ஒரு தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது விஜய் லியோ படப்பிடிப்பு தளத்தில் நடந்துகொள்ளும் விதம் தான் அனைவரின் ஆச்சர்யத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக தளபதி எப்போதும் சைலண்டாகவே தான் இருப்பார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் தளபதி தன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்திருப்பார்.
யாரிடமும் பேசாமல் விஜய் ஒரு ஓரமாக அமர்ந்துவிடுவார் என அவருடன் பணியாற்றிய பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது லியோ படப்பிடிப்பில் தளபதி இதற்கு நேர்மாறாக இருக்கிறாராம். தன் ஷாட் முடிந்துவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரிடமும் ஜாலியாக பேசி வருகிறாராம்.
ஜாலியாக இருக்கும் தளபதி
மேலும் லியோ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருவதால் விஜய் அவர்களுடன் ஜாலியாக உரையாடி வருகிறாராம். குறிப்பாக மிஸ்கின், மன்சூர் அலி கான் ஆகியோர் விஜய்யை கலகலவென வைத்துள்ளதால் அவர்களிடம் நேரம் செலவிட விரும்புகிறாராம் தளபதி. இதைப்பார்த்த படக்குழுவினர் தளபதியா இப்படி என ஆச்சர்யத்தில் இருக்கிறார்களாம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடித்து வரும்போது விஜய் படக்குழுவினருடன் ஜாலியாக பேசி கிரிக்கெட் விளையாடி தன் நேரத்தை செலவிட்டார். அதைப்போல தற்போது லியோ படப்பிடிப்பு தளத்திலும் விஜய் செம ஜாலியாக இருந்து வருகின்றார் என தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.