ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போ வரும் எப்போ வரும் என் கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது லோகேஷ் தரமான பதிலை கொடுத்துள்ளார். அதாவது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ரசிகர்கள் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு படக்குழு அப்டேட் தந்தது.
படத்தின் அறிவிப்பையே ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்ட படக்குழு அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும், படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என ரசிகர்களுக்கு விருந்து வைத்தது லியோ படக்குழு.
Tamannaah: நான் நினைத்தது வேறு..ஆனால் நடப்பது வேறு..திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய தமன்னா..!
இதையடுத்து கடந்த இரு மாதங்களாக லியோ அப்டேட் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்களும் படக்குழு அதிகமாக அப்டேட் கொடுத்துவிட்டதால் அவர்களிடம் அப்டேட் கேட்காமல் இருந்தனர். ஆனால் தற்போது விஜய்யின் பிறந்தநாள் நெருங்க நெருங்க ரசிகர்கள் படக்குழுவிடம் இருந்து அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
லியோ முதல் பாடல்
கண்டிப்பாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் வரும் என ரசிகர்கள் நம்பியிருந்தாலும் என்ன அப்டேட் வரும் என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் அவர்களின் ஆசைக்கேற்ப லோகேஷ் தற்போது லியோ அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதாவது லியோ படத்திலிருந்து முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளார் லோகேஷ்.நான் ரெடி என்ற செம குத்து பாடல் தான் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்பாடலை லோகேஷின் உதவி இயக்குனர் விஷ்ணு தான் எழுதியுள்ளாராம்.
விக்ரம் படத்தில் இடம்பெற்ற போர்கொண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் பாடலை எழுதியதும் இவர்தான். மேலும் விஜய் இப்பாடலை பாடியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் விஜய் தான் இப்பாடலை பாடினாரா இல்லை அனிருத் பாடினாரா என்பது பற்றி தெளிவான தகவல் வெளியாகவில்லை. ஒருவேளை விஜய் இப்பாடலை பாடியிருந்தால் அது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.