ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லியோ படத்தின் அப்டேட் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக வலம் வருகின்றது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் லியோ படக்குழுவிடம் அப்டேட் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அதற்கு காரணம் விஜய்யின் பிறந்தநாள் தான். ஒவ்வொரு வருடமும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அப்போது நடித்து வரும் படங்களில் இருந்து அப்டேட் வருவது வழக்கம். அது போல இந்த வருடமும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.
Tamannaah: நான் நினைத்தது வேறு..ஆனால் நடப்பது வேறு..திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய தமன்னா..!
எனவே விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் ரசிகர்கள் தினம் தினம் சோஷியல் மீடியாவில் லியோ அப்டேட்டை கேட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் இடம்பெறும் நான் ரெடி என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்பாடலை லோகேஷின் உதவி இயக்குனர் விஷ்ணு எழுதியுள்ளதாகவும், விஜய் பாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இப்பாடலை விஜய் தான் பாடினாரா இல்லை அனிருத் பாடினாரா என்பது பற்றி சரியாக தெரியவில்லை. இது ஒருபக்கம் இருக்க தற்போது லியோ படத்தின் போஸ்ட்டரை ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.
லியோ போஸ்டர் டீகோட்
இந்த போஸ்டரில் EGO என்ற வார்த்தையை உற்று கவனித்தால் அதில் LCU என இருப்பதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த சிலர் கண்டிப்பாக லியோ திரைப்படம் LCU வில் தான் உருவாகியுள்ளது. அதை தான் லோகேஷ் மறைமுகமாக கூறியுள்ளார் என பேசி வருகின்றனர். ஆனால் அது LCU இல்லை லியோ என சிலர் கூறி வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் விஜய்யின் கெட்டப்பை வைத்து இப்பாடல் பிளாஷ் பாக் போர்ஷனில் தான் வருவதாகவும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போஸ்டர் வெளியான இரண்டே மணி நேரத்தில் ரசிகர்கள் இந்த அளவுக்கு விஷயங்களை டீகோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.