உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ளது ‘மாமன்னன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்தவர்
உதயநிதி ஸ்டாலின்
. இவர் அமைச்சராக பொறுப்பேற்று பின்பு சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. இவரது நடிப்பில் முன்னதாக ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தபடம் வெளியானது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ‘மாமன்னன்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் தனது படங்களின் வாயிலாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Leo: ரெடியான்னு கேட்ட லோகேஷ் கனகராஜ்.. பின்னாடியே வெளியான மரண மாஸ் அப்டேட்..!
இந்நிலையில் இந்தப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலுவின் குரலுடன் துவங்கும் இந்த அசத்தலான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வடிவேலு, உதயநிதி இருவரும் அப்பா, மகனாக நடித்துள்ளது படத்தின் டிரெய்லரிலே தெரிகிறது. அதே போல் பகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.
டிரெய்லர் முழுக்க பல அழுத்தமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ‘இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்கு பைத்தியமே புடிச்சுரும்’ போன்ற பல மாஸ் வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படம் வரும் 29 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Adipurush Twitter Review: ‘ஆதிபுருஷ்’ படம் எப்படி இருக்கு.?: ட்விட்டர் விமர்சனம் இதோ.!