வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று ( 16 ம் தேதி) சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 290 ஆனது.
ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பிஜெய் பஸ்வான் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் பீஹாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம் என்பவர் காயங்களுடன் கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement