ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவின் முன்னணி
ஸ்மார்ட்போன் நிறுவனங்களில்
ஒன்றான Realme அதன் புதிய 11 pro மாடல் விற்பனையை துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் அதன் Pro Plus மாடல் போன்றே வசதிகள் கொண்டுள்ளது. இதில் லெதர் பினிஷ் பாடி, கர்வ் AMOLED டிஸ்பிளே, Mediatek Chip வசதி, மிகப்பெரிய பேட்டரி என அனைத்தும் Pro + மாடல் வசதிகளே உள்ளன.
Realme 11 pro விவரம் (Specifications)டிஸ்பிளே
இதில் 6.7 இன்ச் FHD+ Curved AMOLED டிஸ்பிளே, 100% DCI-P3 கலர், HDR10 சப்போர்ட், 120HZ refresh rate, 360HZ டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளது.கேமரா வசதிஇதன் கேமரா வசதிகளாக 100MP முக்கிய OIS (Optical Image Stabilisation) கேமரா, 2MP மேக்ரோ கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் முன்பக்கம் 16MP செல்பி கேமரா வசதி உள்ளது.திறன் வசதிகள்திறன் வசதிக்காக Mediatek Dimensity 7050 SoC சிப், கேமிங் திறனுக்காக Mali-G68 GPU, 12GB LPDDR4X RAM, 256GB வசதி UFS 2.2 ஸ்டோரேஜ், Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Realme UI 4.0 OS உள்ளது.சிறப்பு வசதிகள்பேட்டரி திறனாக ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி வசதி , 67W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. மேலும் சிறப்பு வசதிகளாக Dolby Atmos ஸ்பீக்கர், HiRes Audio வசதியும் உள்ளது.விலை (Realme 11 pro Price)இதன் பேஸ் வேரியண்ட் மாடலான 8GB /128GB விலை 23,999 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. இதன் 8GB/256GB வேரியண்ட் 24,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 27,999 ஆயிரம் ரூபாய் விலை வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த போனிற்கு HDFC அல்லது SBI வங்கி கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி சலுகை கிடைக்கும். இந்த போன் விற்பனை தற்போது Realme.com மற்றும் Flipkart ஆகிய தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் Astral Black, Sunrise Beige Shade ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்