ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விரைவில் மாவீரன்சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படம் ஜூலை மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் நடித்துள்ளார்.
வித்யாசம்பொதுவாக சிவகார்த்திகேயன் தன் படங்களில் கலகலவென நடித்துவருவார். ஆனால் மாவீரன் படத்தில் அதற்கு நேர்மாறான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவர் மிகவும் சீரியஸான ரோலில் நடித்துள்ளார் என இயக்குனர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவீரன் திரைப்படம் பாண்டஸி படமாக உருவாகியுள்ளதாகவும், அதேசமயம் கமர்ஷியலாகவும் இருக்கும் என்றும் வந்துள்ள தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்த்துள்ளது. விரைவில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
SK21மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி நாயகியாக முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து இப்படமும் மாவீரன் படத்தை போல வித்யாசமான கதைக்களத்தில் தான் உருவாகி வருகின்றது. மேலும் இப்படத்திற்காக தன் கெட்டப்பை சிவகார்த்திகேயன் முற்றிலும் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது
கிளைமாக்ஸ் காட்சிசிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் SK21 திரைப்படம் கிளைமாக்ஸ் காட்சி பற்றிய ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது SK21 திரைப்படம் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படும் ஒரு இந்திய ராணுவ வீரரின் கதையைத்தான் மையமாக வைத்து எடுத்து வருவதாக சில செய்திகள் வெளியாகின. எனவே அதன் படி பார்த்தல் சிவகார்த்திகேயன் SK21 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுவார் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.இதையடுத்து SK21 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா என்ற சோகத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது