SJ Suryah: 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கும் எஸ்.ஜே. சூர்யா: நடிப்பு ராட்சசன் தான் ஹீரோ

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
SJ Suryah to direct Killer movie: எஸ்.ஜே. சூர்யாவை மீண்டும் இயக்குநராகச் சொல்லி வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் மீண்டும் கேமராவுக்கு பின்னால் நிற்க முடிவு செய்துள்ளார்.

​எஸ்.ஜே. சூர்யா​நடிகராகும் ஆசையில் கோலிவுட் வந்த எஸ்.ஜே. சூர்யா அஜித் குமாரின் வாலி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு விஜய்யை வைத்து குஷி எனும் ஹிட் படத்தை கொடுத்தார். தொடர்ந்து வித்தியாசமான ஹிட் படங்களாக கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்திற்கு பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
​நடிகர்​ஹீரோவாக மட்டும் அல்ல கொடூர வில்லனாகவும் அசத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரை படங்களில் பார்க்கும்போது எல்லாம் தயவு செய்து மீண்டும் படம் இயக்கப் போங்க என ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் தான் மீண்டும் இயக்குநராக முடிவு செய்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. 8 ஆண்டுகள் கழித்து படம் இயக்கப் போகிறார்.

​கில்லர்​2 முறை அபார்ஷன், நான் செஞ்ச காரியம் தான் காரணமோனு புலம்பினேன்: அஜித், விஜய் பட ஹீரோயின்படம் இயக்குவது குறித்து எஸ்.ஜே. சூர்யா கூறியிருப்பதாவது, நான் கில்லர் என்கிற படத்தை இயக்கவிருக்கிறேன். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. கில்லரில் நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். தற்போது நான் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு கில்லர் பட வேலை துவங்கும் என்றார்.​ஹீரோ​தான் இயக்கிய நியூ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார் எஸ்.ஜே. சூர்யா. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி, ஹீரோவாக நடித்தார். அதில் இசை படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்தார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார் எஸ்.ஜே. சூர்யா.​பொம்மை​ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானிசங்கர் நடித்த பொம்மை படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. பொம்மை படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன், தயாரிக்கவும் செய்திருக்கிறார். மான்ஸ்டரை அடுத்து பொம்மை படம் மூலம் மீண்டும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் எஸ்.ஜே. சூர்யாவும், ப்ரியா பவானிசங்கரும் என்பது குறிப்பிடத்தக்கது.
​Vijay Sethupathi: தளபதி விஜய் அல்ல விஜய் சேதுபதி மகன் தான் ஹீரோவாகிறார்​ரிலீஸ்​பொம்மை படத்தின் ஷூட்டிங் கடந்த 2020ம் ஆண்டே முடிந்துவிட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே ரிலீஸாக வேண்டிய படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது இது குறித்து சூர்யா கூறியதாவது, கடந்த ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பே பொம்மை படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால் சரியான நேரத்திற்காக பொறுமையாக காத்திருந்தேன். பெரிய படங்கள் வராத நேரமாக பார்த்து வெளியிட நினைத்தேன் என்றார்.
​ராதாமோகன்​சூர்யா மேலும் கூறியதாவது, ஒரு பொம்மையுடன் காதல் கொள்வது குறித்த கதையை ராதாமோகன் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மொழி, அபியும் நானும் ஆகிய படங்களை இயக்கிய ராதாமோகனின் திறமையை அருகில் இருந்து பார்த்தேன் என்றார். இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முக்கிய வில்லனே எஸ்.ஜே. சூர்யா தான் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.