ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் கடந்த 18 ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகின்றார் நடிகை தமன்னா. கேடி என்ற படத்தின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமான தமன்னாவிற்கு தனுஷின் படிக்காதவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்தின் வெற்றி அவருக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தது.
சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்தார் தமன்னா. 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்த தமன்னாவிற்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைய துவங்கின.
திருமணம் பற்றி தமன்னா
அப்போது தெலுங்கு திரையுலகிற்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாக மாறினார் தமன்னா. ராஜமௌலியின் பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தன் மார்க்கெட்டை தமன்னா நிலைநாட்டினார். அதன் பிறகு பாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் தமன்னா நடித்து வருகின்றார்.
Vijay: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடந்த மீட்டிங்..விஜய் போட்ட உத்தரவு..மீறாத ரசிகர்கள்..!
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜீ கர்தா என்ற வெப் தொடரில் நடித்த தமன்னா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு ஆபாசமாக தமன்னா இந்த தொடரில் நடித்துள்ளார். இதன் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் தமன்னா சந்தித்து வருகின்றார்.
இதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடரிலும் தமன்னா நடித்துள்ளார். இதிலும் தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த தொடரில் நடிக்கும்போது நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் விழுந்ததாக ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் தமன்னா தன் திருமணத்தை பற்றி பேசியது தான் வைரலாகி வருகின்றது.
பிஸியான தமன்னா
அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் பத்து வருடங்கள் சினிமாவில் நடித்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தேன். 30 வயதில் எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் என நினைத்தேன். ஆனால் தற்போது 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றேன்.
மேலும் திருமணம் செய்ய சில பொறுப்புகள் தேவை. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
எனவே நான் எப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கின்றேன் என உணர்கிறேனோ அப்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார் தமன்னா. இந்நிலையில் தமன்னா மற்றும் விஜய் வர்மா நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியுடன் தம்மன்னா நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.