மத்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: மணிப்பூரில் தொடரும் கலவரம்!
மணிப்பூரில் இரு குழுவுக்கு மத்தியில் நடக்கும் வன்முறை கலவரம் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும், மணிப்பூர் எம்.பியுமான ஆர்.கே ரஞ்சன் சிங்-ன் வீடு நேற்றிரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக மணிப்பூர் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.