ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Kalaignar centenary celebrations: கலைஞர் கருணாநிதி பற்றி பெருமையாக பாடல் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழாமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.வைரமுத்துவைரமுத்து எழுதியிருக்கும் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யாசின் பாடியிருக்கிறார். இருக்கின்றார் இருக்கின்றார் கலைஞர் இருக்கின்றார் என யாசின் பாடும் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு வைரமுத்து கூறியிருப்பதாவது, கலைஞர் நூற்றாண்டுக்கு
ஒரு புகழ்ப்பாட்டு
எழுதியிருக்கிறேன்
ஜிப்ரான் இசையில்
யாசின் பாட
நேற்று ஒலிப்பதிவு செய்தோம்
இது
தமிழ்நாட்டரசின் தயாரிப்பு
விரைவில்
தமிழ்கூறு நல்லுலகுக்கு…
#கலைஞர்100 #kalaignar100 என தெரிவித்துள்ளார்.மேக்கிங் வீடியோகவிப்பேரரசுஅந்த மேக்கிங் வீடியோவில் ள, ழக்கு இடையேயான வித்தியாசத்தை யாசினுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் வைரமுத்து. அவர் சொல்லிக் கொடுத்தபடியே பாடியிருக்கிறார் யாசின். ஜிப்ரான் இசையில் கலைஞர் பற்றிய பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. மேக்கிங் வீடியோவை பார்த்தவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாடல் அருமை, இசை சிறப்பு, யாசினின் குரல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
திமுகதிமுகவினர் கூறியிருப்பதாவது, கலைஞரின் புகழ்பாடும் இந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். வைரமுத்துவின் வரிகளை குறை சொல்லவே முடியாது. கலைஞர் மீதான அவரின் பாசம் தெரிகிறது. வைரமுத்துவின் வரிகளில் மட்டும் தான் இந்த உயிர்ப்பு இருக்கும். இந்த பாடல் என்றும் நிலைத்து நிற்கும். சிறப்பு வைரமுத்து ஐயா, வாழ்த்துக்கள் என கூறியுள்ளனர்.
புவனா சேஷன்கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வைரமுத்து பற்றி சமூக வலைதளங்களில் வேறு விதமாக பேசினார்கள். இந்நிலையில் அவரை பலரும் பாராட்டுகிறார்கள். வைரமுத்துவால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாடகி புவனா சேஷன் தெரிவித்தார். தன்னை போன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அது பற்றி பேசுவதாக புவனா தெரிவித்தார். மேலும் வைரமுத்துவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயியின் தைரியத்தை பாராட்டினார் புவனா.
வைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது: பாடகி புவனா சேஷன்
புகார்வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்கள். அதில் நான்கு பேர் தான் தைரியமாக தங்கள் முகத்தை காட்டியதுடன், பெயரையும் தெரிவித்தார்கள் என்றார் புவனா. அவர் கூறியதை பார்த்த சினிமா ரசிகர்களோ, வைரமுத்து மீது புகார்கள் குவிந்து கொண்டே இருக்கிறதே. அது யார் புகார் தெரிவிக்கப் போகிறாரோ என்றார்கள்.
ப்ரியா பவானிசங்கர்Priya Bhavani Shankar: சினிமாவில் மட்டுமா, எல்லா துறையிலும் பெண்களுக்கு அந்த கொடுமை நடக்குது: ப்ரியா பவானிசங்கர்புவனா சேஷன் புகார் தெரிவித்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களை குறை சொல்வதை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல வருவதை கேட்க வேண்டும் என்றார் ப்ரியா பவானி சங்கர். பாலியல் தொல்லை நடந்த உடனே ஏன் அதை பற்றி பேசவில்லை, தற்போது ஏன் பேசுகிறாய் என்பது போன்ற கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றார். சினிமா துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கூறினார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.