ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் ஆலய வாரியம் பக்தர்களுக்கு விடுத்துள்ள சுகாதார ஆலோசனையில் கூறியுள்ளதாவது: அமர்நாத் யாத்திரையில் பானங்கள், வறுத்த மற்றும் துரித உணவுகளை பக்தர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
தடைசெய்யப்பட்ட 40 உணவுகளில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாத்துரா, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, பொறித்த அப்பளம் உள்ளிட்டவை அடங்கும்.
அதற்கு பதிலாக, அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற உணவுகளை பக்தர்கள் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அமர்நாத் வாரியம் கூறியுள்ளது.