இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் – இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி , தென் கொரியா கேங், சியோ ஜோடியை எதிர்கொண்டனர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தென் கொரியா கேங் மின் , சியோ ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்றனர்.

இதனால் சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.