'எனக்கு மரியாதை கொடுக்கவில்லை' – அமைச்சரிடம் கொதித்த எம்.பி: ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ராமநாதபுரத்தின் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி 3 மணிக்குத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் 2.45 மணிக்கே வந்துவிட்டதால், அவரது உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியைத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் குறுக்கிட்டு, அடுத்த முறை இது போன்ற நடக்காமல் பார்த்துக் கொள்வோம் வாருங்கள் எனக் கூறியுள்ளார். நானும் மக்கள் பிரதிநிதி தான் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் ஆட்சியரிடம் கேட்கிறேன். நீங்கள் குறுக்கிடாதீர்கள். நான் ஆட்சியரிடம் பேசிக்கொள்கிறேன் எனக் கோபமாகப் பேசினார். அதற்கு “சும்மா போயா அங்கிட்டு என அமைச்சர் ராஜகண்ணப்பன் எதிர்த்துக் கோபப்பட்டதால், என்ன வாயான்னு சொல்ற தொலைத்துவிடுவேன் என நவாஸ்கனி எம்.பி கொந்தளிக்க நிகழ்ச்சி நடைபெறுமிடம் களேபரமானது.

அமைச்சரிடம் கோபமாக பேசும் எம்.பி நவாஸ் கனி

இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்களுக்கும், எம்.பி நவாஸ்கனி ஆதரவாளர்க்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

அசாதாரண சூழல் உருவாகுவதை அறிந்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நவாஸ் கனி எம்.பியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆட்சியரைக் கட்சியினர் சிலர் கிழே தள்ளிவிட்டனர். அதைப்பார்த்துப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் கீழே விழுந்த ஆட்சியரை மேலே தூக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்தபடியே தலைமைச் செயலாளருக்குத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து எம்.பி நவாஸ்கனி வெளிநடப்பு செய்தார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நீங்கள் நிகழ்ச்சியை நடத்துங்கள் என ஆட்சியரிடம் தெரிவித்ததையடுத்து தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிநடப்பு செய்த நவாஸ்கனி எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ”நிகழ்ச்சி முன்கூட்டியே தொடங்கப்படும் தகவல் தெரிவித்து இருந்தால் வந்திருப்பேன். இது என்னை அவமானப்படுத்துவது போல் உள்ளது.

அடுத்த நிகழ்ச்சியில் அமைச்சரும், எம்.பியும்

மாவட்ட நிர்வாகத்தினர் இது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். சொன்ன நேரத்துக்கு சரியாக வந்து பார்த்தால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என‌ மாவட்ட ஆட்சியர் மீது தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். இப்போதுதான் புதிதாக மாவட்ட ஆட்சித் தலைவராக வந்திருக்கிறார் இனிமேல் திருத்திக் கொள்வார். இனி வரக்கூடிய காலங்களில் அதனைச் சரி செய்து கொள்ள வேண்டும். இது போன்று பண்ணக்கூடாது என்பதற்காக வெளிநடப்பு செய்துள்ளேன். இதில் உள் அரசியல் இருக்கிறதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. நான் யார் தரப்பும் இல்லை. நான் ஒரு மக்கள் பிரதிநிதி. என்னுடைய உரிமை அதனை மாவட்ட ஆட்சியரிடம் கூறினேன்.’ என்றார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனும், தி.மு.க கூட்டணிக் கட்சியை சேர்ந்த ‌எம்.பி நவாஸ் கனியும் அரசு நிகழ்ச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பனை தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இறுக்கமான முகத்துடன் இருவரும் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.