அகமதாபாத் பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. மாலை 6.30 மணி முதல் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையைக் […]