மத்திய பிரதேச மாநிலம் திண்டாரி மாவட்டம் சஹாஜ்புரியில் வசிப்பர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜமானி. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜமானிக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பிறந்ததுமே ரொம்பவே பலவீனமாகவும் உடல் நலக்குறைவுடனும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் குழந்தையை ஜபல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையின் போது குழந்தை பலனின்றி உயிரிழந்தது.
நாளைய வாக்காளர்களே… ஸ்ட்ராங்காய் அடித்தளம் போட்ட விஜய்!
குழந்தை இறந்த பிறகு, உடலை எடுத்துச் செல்ல வாகனம் வழங்குமாறு குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. தங்களிடம் பணம் இல்லாததால் வாடகைக்கு டாக்ஸி பெற முடியாமல் பேருந்திலேயே தங்களின் பச்சிளம் குழந்தையின் உடலை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து ஆட்டோ ரிக்ஷா மூலம் ஜபல்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். பேருந்துகளிலும் குழந்தையின் உடலோடு அவர்களை ஏற்ற மறுத்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடலை தங்களின் பேக்கில் மறைத்து வைத்து 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர் அந்த பெற்றோர்.
விடிய விடிய தயாரான 15 வகை சைவ உணவுகள்… விஜய் கொடுத்த மெனு லிஸ்ட்!
நள்ளிரவில் திண்டாரிக்கு சென்றபோது உறவினர்கள் வருவார்கள், உதவி செய்வார்கள் என காத்திருந்தனர் அந்த பெற்றோர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இதனிடையே குழந்தையின் பெற்றோர் தங்களிடம் ஆம்புலன்ஸ் எதுவும் கேட்கவில்லை என குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.
கடந்த மாதம் மேற்கு வங்கத்திலும் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. பச்சிளம் குழந்தையின் உடலோடு பெற்றோர் 200 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்தனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்ததும் அம்மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜி, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்ஃப் டிரைவ்… நந்தினிக்கு வைர நெக்லஸ்… உருக வைத்த கிஃப்ட்… விஜய் எமோஷனால தருணம்!