சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில், தேர்வெழுதிய 12 ஆயிரத்து 997 பேரில் 3 ஆயிரத்து 982 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.