உக்ரைனை இராணுவமயமற்ற நிலைக்கு தள்ளும் ரஷ்யாவின் குறிக்கோள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் திட்டம் பெரும்பாலும் நிறைவு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒன்றரை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் தரப்பு தகவலின் படி, இந்த போர் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Peskov said that the task of Ukraine’s demilitarization had been “largely fulfilled”
Putin’s spokesman explained that Ukraine is using less and less of its own weapons, which are being replaced by Western weapons. As a result, NATO countries “intervene” in the conflict, causing… pic.twitter.com/n5PSp4e15d
— NEXTA (@nexta_tv) June 17, 2023
ஆனால் ரஷ்ய தரப்பில் இதுவரை உக்ரைனிய படை வீரர்கள் இழப்பு குறித்து எதுவும் தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைனை இராணுவமயமற்ற நிலைக்கு தள்ளும் ரஷ்யாவின் பணி பெரும் அளவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மோதலில் தலையிடும் நேட்டோ
அத்துடன் தாக்குதலில் உக்ரைன் மிக மிக குறைந்த அளவே சொந்த ஆயுதங்களை பயன்படுத்துகிறது, மேலும் சொந்த ஆயுதங்களுக்கு மாற்றாக மேற்கத்திய ஆயுதங்களை உக்ரைன் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் நேட்டோ நாடுகள் மோதலில் தலையிடுகிறது என்பதாகும், இதன் விளைவு மோதலும் நீடித்து வருகிறது.
இதனால் டான்பாஸில் உள்ள ரஷ்யர்களை பாதுகாக்க ரஷ்யா அதி பயங்கர ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறது என செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |