டப்ளின்: அயர்லாந்து நாட்டில் குடியேறுபவர்களுக்கு அந்நாட்டு அரசு இந்திய மதிப்பில் 71 லட்சம் ரூபாய் தருவதாக அழைப்பு விடுத்துள்ளது.
பலரும் சொந்த ஊரை விட்டு, சொந்த மாநிலத்தை விட்டு ஏன் சொந்த நாட்டை விட்டு எங்கோ ஒரு நாட்டில் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள். அப்படி செல்லும் ஊரில் வீடு வாங்கி செட்டி ஆகிவிட பல ஆண்டுகள் ஆகும்.
அதேநேரம் சொந்த நாட்டை விட்டு சென்று வேறு நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் இந்தியர்கள் அதற்காக ஏராளமான பணத்தை செலவு செய்ய வேண்டியதிருக்கும். அதற்காக பல வருட உழைப்பையும் செலுத்த வேண்டியதிருக்கும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் செட்டில் ஆக விரும்பினாலோ, கனடாவில் செட்டில் ஆக விரும்பினாலோ, அமெரிக்காவில் செட்டில் ஆக விரும்பினாலோ ஏராளமான பணத்தை செலவு செய்ய வேண்டியதிருக்கும். அத்துடன் ஊதியமும் அதிக அளவு அந்நாட்டில் வாங்குபவராக இருக்க வேண்டும். பல வருடம் குடியேறி இருக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு நாடு தங்கள் நாட்டில் குடியேற பணம் தருவதாக அழைத்தால் எப்படி இருக்கும். அதுவும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடு என்றால் எப்படி இருக்கும். நம்புற மாதிரி கதை சொல்லுப்பா என்கிறீர்களா.. உண்மை தான்.. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டில் குடியேற விரும்புவோருக்கு €80,000 (தோராயமாக 71 லட்சம்) தரப்போகிறது.
அயர்லாந்து அரசு தங்கள் நாட்டின் ஆள் குறைவாக உள்ள தீவுகளில் மக்களை குடியேற்றுவதற்காக ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அயர்லாந்தில் உள்ள கடலோர பகுதிகளில் குடியேறுபவர்களுக்கு அங்கு தொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது ஒருபுறம் எனில், பணம் கொடுத்து பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அயர்லாந்தின் தீவுகளின் மக்கள்தொகையை அதிகரிக்க இப்படியான திட்டத்தை அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன.
அயர்லாந்தின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தின்படி, “அயர்லாந்து நாட்டில் மக்களை குடியேற்றும் கொள்கையின் நோக்கம், நிரந்தரமாக மக்கள் கடல் தீவுகளில் தொடர்ந்து வாழவும் அங்கு அந்த பகுதியையும் மக்களையும் செழிப்புடன் முன்னேற்ற உறுதி செய்வது தான் கொள்கையாம்.
அதன்படியே அயர்லாந்து நாட்டின் தீவுகளில் உள்ள கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலை அனுபவித்து வாழ விரும்பும் மக்கள், ஜூலை 1 முதல் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்னங்க திட்டம் சூப்பராக இருக்குதுல்ல.. அயர்லாந்துக்கு நேரடியாக பிளைட் டிக்கெட் எவ்வளவுன்னு பார்த்துடலாமா..