சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடமா தமிழ்நாடு உள்ளது என்றும், பல சேம்பியன்களை அமைச்சர் உதயநிதி உருவாக்கு வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழாவில், முதல் மூன்று இடங்களை பிடுத்த அணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியின் அவர் பேசியதாவது, “உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் 4 வீரர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமை.
80 தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. வெற்றியை இலக்காக நிர்ணயித்து வீரர்கள் விளையாட வேண்டும். உங்கள் வெற்றி பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும்.
தமிழகத்தில் ஆசிய ஹாக்கி சாம்பியன் தொடர், உலக சார்பிங் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி பெற ஏதுவும் தடையாக இருக்க கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைச்சர் உதயநிதி விளையாட்டு துறையின் கேப்டனாக இருந்து, வீரர்களை சாம்பியனாக உருவாக்கி வருகிறார்.
தமிழ்நாடு சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடமா உள்ளது. அதன் காரணமாகத்தான் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” யென்று முதலவர் ஸ்டாலின் பேசினார்.