ஹரியானா காவல் துறையினர் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் ஓபியம் உள்ளிட்ட சுமார் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமான போதைப் பொருட்கள் குருகிராமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.