சென்னை: சாஹோ, ராதே ஷ்யாம் படங்களை தொடர்ந்து பிரபாஸுக்கு ஹாட்ரிக் தோல்வியாக ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக பிரபாஸ் ரசிகர்களே புலம்பி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வெந்த புண்ணில் வேலை நல்லாவே பாய்த்துள்ளார்.
500 கோடி, 600 கோடி இஷ்டத்துக்கு நம்ப முடியாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் எனக் கூறுகின்றனர். ஆனால், படத்தை பார்த்தால், சுட்டி டிவி அனிமேஷனே தோற்று போய் விடும் அளவுக்குத்தான் இருக்கிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
ராமாயண கதையை படமாக்குகிறேன் என்கிற பேர் வழியில் ராமரையும் ராவணனையும் அசிங்கப்படுத்தியது தான் மிச்சம் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.
வந்து நொந்த கதை: ராமாயணத்தை தெருக்கூத்தாக பார்த்து இருப்போம், சீரியலாக பார்த்து இருப்போம், சினிமாவாக பார்த்து இருப்போம். இப்படி வந்து நொந்த கதையை படமாக்கும் போது அதன் விஷுவல் மற்றும் மேக்கிங்கால் பிரம்மிக்க வைக்க வேண்டும். ஆனால், அதை விட்டு விட்டு அதையும் எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஓம் ராவத் என ஆரம்பமே அதிரடி காட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
3 மணி நேரம் படத்தை பார்த்தால் என்னமோ 10 நாள் தியேட்டரிலேயே உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு ஃபீலிங் வருகிறது. விறுவிறுவென காட்சிகளை வைத்து வியக்க வைத்திருந்தாலே இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். அதை விட்டு விட்டு அவார்டு படம் எடுப்பது போல லெந்தியான ஷாட்களை வைத்து பொறுமையை சோதித்து விட்டனர் எனக் கூறியுள்ளார்.
புள்ளிங்கோ கட்டிங் ராவணன்: ராமராக பிரபாஸை பார்க்கவே முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வில்லனாக வரும் ராவணன் மிரட்டுவதற்கு பதிலாக சிரிப்பு மூட்டி உள்ளார். தலை இந்த பக்கம் 5 அந்த பக்கம் 5 தானே இருப்பதாக இத்தனை காலம் நாம் பார்த்திருப்போம். அதை மாற்றி டபுள் டெக்கர் பஸ் போஸ் கீழே, மேலே ஐந்து ஐந்து தலைகளை வைத்துள்ளனர்.
ராவணனுக்கு புள்ளிங்கோ கட்டிங் எல்லாம் செய்து அலற விட்டுள்ளார் இயக்குநர். பைல்ஸ் வந்த நபரை போல இரந்து கால்களையும் அகட்டிக் கொண்டு ராவணன் நடந்து வருவதெல்லாம் சகிக்கவே இல்லை.
மொத்தத்தில் பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் எடுத்து ராமர் மார்க்கெட்டையே இயக்குநர் காலி பண்ணி விட்டார் என டோட்டலாக ரோஸ்ட் செய்துள்ளார்.