சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து நீடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இதன் அடுத்தடுத்த ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கோபி, பாக்கியா, ராதிகா என மூன்று முக்கியமான கேரக்டர்களை வைத்து இந்தத் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
பெங்காலியில் சிறப்பான வரவேற்பை பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பழனிச்சாமியிடம் மொக்கை வாங்கும் கோபி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த வார டிஆர்பியில் இந்த சீரியல் 9.4 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்தடுத்த தொடர்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் எதிர்நீச்சல் தொடர்கள் உள்ளன. இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்களை கொடுத்து வருகிறது. பெங்காலியில் பிரபலமான ஸ்ரீமோயி என்ற தொடரை மையமாக கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்களையும் அவர்களது உறவுகளையும் மையமாக கொண்டு கதைக்களம் உருவாகியுள்ளது. தன்னுடைய அப்பாவி மனைவியை ஏமாற்றி விவாகரத்து பெற்றுவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய நினைத்த கோபிக்கு, அந்த தருணம் கிடைத்த நிலையில், அவரால் அதை என்ஜாய் செய்ய முடியாத வகையில், அடுத்தடுத்த பிரச்சினைகள் சூழ்கின்றன.
முதல் மனைவியுடனேயே தான் சிறப்பாக ராஜாவாக இருந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு கூஜாவாக மாறியதாகவும் அவர் புலம்பும் வகையில் அவரது வாழ்க்கை மாறுகிறது. இந்நிலையில், தனக்கு அடக்கமாக இருந்த தன்னுடைய முதல் மனைவியின் முன்னேற்றம் மற்றும் பழனிச்சாமி என்பவருடன் அவரது பழக்கம் ஆகியவையும் கோபிக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. விவாகரத்து பெற்றபோதிலும், இந்த விஷயங்கள் அவரை தொடர்ந்து புலம்பலில் தள்ளுகிறது.
இதனிடையே, பழனிச்சாமி, பாக்கியாவின் உறவுக்கார பெண்ணை பெண் பார்க்க அவர்களது வீட்டிற்கு வர, பாக்கியாவைத்தான் அவர் பெண் பார்க்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் அவரால் மற்றவர்களுடன் இயல்பாக இருக்க முடியவில்லை. மற்றவர்களின் கேலிக்கும் உள்ளாகிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் மிகுந்த கடுப்புக்குள்ளாகி பழனிச்சாமியின் வீட்டிற்கே நியாயம் கேட்க போகிறார்.
இதையடுத்து பழனிச்சாமி, கோபியிடம் நடந்துக் கொள்வதுதான் எதிர்பார்க்காத ட்விஸ்ட். பிரம்மாண்டமான வீட்டை பார்த்து வாய்பிளக்கும் கோபி, பயங்கர கோபத்துடன் உள்ளே சென்று பவுன்சர்களிடம் முட்டிக் கொள்கிறார். தொடர்ந்து, பழனிச்சாமியிட்ம் சென்று தன்னுடைய மனைவியிடம் பழனிச்சாமி ஏன் தொடர்ந்து பேசுகிறார் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் பழனிச்சாமி, அவருடைய மனைவி யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.
தொடர்ந்து கோபி, பாக்கியா குறித்து பேச, அவருக்கும் பாக்கியாவிற்கும் ஒன்றும் இல்லை என்று ஆன நிலையில், அவரிடம் பேசுவதை கோபி, கேள்வி எழுப்ப முடியாது என்றும், அதனால் கோபி, mind yur own business என்றும் ஆங்கிலத்தில் கூறுகிறார். அவரது இந்த பதிலுக்கு எந்த வகையிலும் ரியாக்ட் செய்ய முடியாத கோபி, தன்னுடைய வழக்கமான திருதிரு முழியையே பதிலாக கொடுக்கிறார். தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தாலும், அவள், யாருடனும் செல்லாமல் தன்னுடைய நினைவாகவே வாழ வேண்டும் என்ற மென்டாலிட்டியையே கோபி பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.