சென்னை : குழந்தை நட்சத்திரமான அவுரா பட்நாகரின் தந்தை விவேக் படோனி தனது மகளுக்காக நடிகராகவும் மாறினார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2011ம் ஆண்டு பிறந்தவர் அவுரா பட்நாகர். தீப்தி மற்றும் விவேக் படோனியின் மகளான அவுரா பட்நாகர் , குழந்தையாக இருக்கும் போதே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது ஈடுபாட்டுடன் இருந்தார்.
இதனால், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பாரிஸ்டர் பாபு என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். பெங்காலி தொடரில், அவுரா போண்டினியாக நடித்திருந்தார்.
பொம்மி பிஏபில் : இந்த நெடுந்தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பொம்மி பிஏபில் என்ற பெயரில் ரீமேக் செய்து ஒளிபரப்பானது. இந்த தொடரில் க்யூட்டாக நடித்த அவுராவை தமிழ் ரசிகர்கள் பொம்மி பொம்மி என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
அண்மையில் பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த அவுரா பட்நாகர். அதில்,முதன் முதலில் கேமரா முன் நின்ற போது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அம்மா கூடவே இருந்து எனக்கு தைரியத்தை கொடுத்தார்கள். அதனால் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது என்றார். மேலும், தென் தமிழகத்தில் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
மகளுக்காக நடிகரானார்: இந்நிலையில் அவுரா பட்நாகரின் தந்தை விவேக் படோனி தனது மகளுக்காக நடிகராக மாறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. குட்டி பெண்ணான அவுரா கேமராவைப் பார்த்து பயந்த போது அப்பா, அம்மா இருவரும் உடன் இருந்தனர். இதில் அவுரா பட்நாகரின் அப்பா தனது மகளுக்காக அந்த சீரியலில் டாக்டராக நடித்து இருக்கிறார்.