இணைய உங்கில் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட் ஜிபிடி அம்சத்தை முதன்முறையாக மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OpenAI உருவாக்கியுள்ள சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் விரும்பும் தகவலை வழங்குகின்றது. தேடுப்பொறி போல அல்லாமல் உடனடியாக தகவலை வழங்குகின்றது.
ChatGPT-Powered Hey Mercedes
ஜூன் 16, 2023 முதல், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சாட் ஜிபிடி மூலம் குரல் வழி வசதிகளை வழங்கும் சோதனை முயற்சியை மூன்று மாதங்களுக்கு தொடங்கியுள்ளது. MBUX வாய்ஸ் அசிஸ்டென்ஸ் செயல்பாடு பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது சாட் ஜிபிடி மூலம் செயல்படும்.
அமெரிக்காவில் உள்ள சுமார் 9,00,000 வாகனங்கள் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure OpenAI மூலம் இந்த ஒருங்கிணைப்பு வசதி கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“Hey Mercedes” குரல் கட்டளை மூலம், ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுடன் மிகவும் இயல்பான முறையில் தொடர்பு கொள்ளலாம். ChatGPT உதவியுடன் இயக்கப்படும் குரல் உதவியாளர், டிரைவருக்கும் காருக்கும் இடையே தடையற்ற தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது.
மைக்ரோசாப்டின் கிளவுட் மற்றும் AI இயங்குதளத்தில் பயன்படுத்துவது இந்த ஒருங்கிணைப்பின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும். இது இயற்கையான உரையாடல் வடிவத்தில் குரல் கட்டளைகளை செயலாக்குதல் மற்றும் புரிந்துகொள்வதை உறுதி செய்கிறது.
ChatGPT குரல் கட்டுப்பாடு தரவு பென்ஸ் மூலம் சரிபார்க்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தரவு தனியுரிமை மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்முறைகளை கொண்டுள்ளது.