வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்டாங்க்: சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 35,00 பேர் முகாம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் வடக்கு மாவட்டங்கள், லாச்சென், லாங்டாங்க், பீகாங்க் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவு காரணமாக சாலைகளில் பாறைகள் விழுந்தது வாகன போக்குவரத்து பெரும் பாதிப்பிற்குள்ளானது. மலை பிரதேசங்களில் சுற்றுலா சென்றிருந்த 3,500 பேர் முகாமிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.. தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement