டோக்கியோ: பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தி, ஜப்பான் பார்லிமென்டில், புதிய சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாடு, பாலியல் குற்றச்சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வயது வரம்பை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement