அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்கள் கூடுதல் வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2023 Kia Seltos Facelift
உலகளாவிய சந்தையில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வடிவமைப்பை பெற்றுள்ள இந்திய மாடல் முன் மற்றும் பின்புறத்தில் பெற்றதாக சோதனை செய்யப்பட்டு வருகின்றது. முன்பக்கத்தில், கிரில் இப்போது மிகவும் பெரியது மற்றும் பம்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஹெட்லேம்ப் மாற்றப்பட்டு புதிய எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் உள்ளது. ஃபோக் லேம்ப் மற்றும் ஏர்வென்ட் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பம்பர், கிளாடிங் போன்ற மாற்றங்கள் பெற்று எல்இடி டெயில் விளக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியாகவில்லை, ஆனால் புதிய கியா செல்டோஸ் காரில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் என இரண்டுக்கும் 10.25-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். ADAS தொழில்நுட்பத்தை கொண்டிருக்கலாம். எலக்டரிக் அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி ஏசி கட்டுப்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு, இயங்கும் டெயில்கேட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பெற்றிருக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை செல்டோஸ் எதிர்கொள்ளுகின்றது.