நேற்று மாலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் உள்ளனர். அதற்கு காரணம் ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இந்த ட்ரீட்டை கொடுக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ‘லியோ’ பட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளில் அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஜுன் 22 ஆம் தேதி தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் விஜய். இந்த நாளில் ‘லியோ’ படத்திலிருந்து என்ன அப்டேட் வெளியாகும் என டிவி டிபேட் வைக்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வந்தன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தான் நேற்று மாலை ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளில் வெளியாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ‘நான் ரெடி’ என துவங்கும் இந்தப்பாடல் வரும் 22 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட பிரத்யேக போஸ்டரில் கையில் துப்பாக்கி மற்றும் விஜய் புகைப்பிடிப்பதை போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘லியோ’ பட போஸ்டர் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். ‘லியோ’ படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
Robo Shankar: தற்கொலை முயற்சி.. சாவின் விளிம்பிற்கே சென்றேன்: நடிகர் ரோபோ சங்கர்.!
அவர் புகைப்பிடிக்கும் காட்சிகளை பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் சமூக பொறுப்பு அவருக்கு உண்டு. அதைத்தான் சட்டமும் சொல்கிறது. என நடிகர் விஜய் கடந்த 2007, 2012 ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததை போலவே படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் விஜய் இதே போல் சிகரெட் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை கிடையாது. ‘துப்பாக்கி’ பட போஸ்டரில் சுருட்டு புகைப்பது போன்ற போஸ்டர் வெளியான சமயத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்பின்னர் சர்க்கார் பட போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிப்பதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது விமர்சனத்திற்குள்ளானது. இதனையடுத்து தற்போது ‘லியோ’ பட போஸ்டரும் அதே சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: ரெடியான்னு கேட்ட லோகேஷ் கனகராஜ்.. பின்னாடியே வெளியான மரண மாஸ் அப்டேட்..!