Raptee Electric Motorcycle – ரேப்டீ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது ?

இந்தியாவின் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக உருவாகி வரும் தமிழ்நாட்டில் மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேப்டீ (Raptee) உற்பத்தி ஆலையை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிப்பதற்கான தனது முதல் தொழிற்சாலையை ரேப்டீ சென்னையில் திறந்துள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் முதற்கட்டமாக ரூ.85 கோடி முதலீடு செய்ய ரேப்டீ திட்டமிட்டுள்ளது.

Raptee Electric Motorcycle

ரேப்டீ R&D மையம் தளத்தில் மேம்பாடு மற்றும் சோதனை வசதிகளை கொண்டதாக உள்ளது. உற்பத்தி ஆலையில் பிரத்யேக பேட்டரி பேக் அசெம்பிளி லைனையும் கொண்டிருக்கும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேப்டீ நிறுவனம் தனது முதல் மோட்டார்சைக்கிள் மாடல் அதிகபட்சமாக 135kmph வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 150 கிமீ வரை பயணிக்க இயலும், 0-60kmph வேகத்தை எட்டுவதற்கு 3.5 வினாடி மட்டும் தேவைப்படும். கார்களில் இடம்பெற்றிருப்பதை போன்ற CCS 2 சார்ஜரை ஆதரிப்பதனால் 0-80 % பேட்டரியை சார்ஜ் ஏற்ற 45 நிமிடம் போதுமானதாகும்.

பேட்டரி தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. அனேகமாக 5Kwh பேட்டரியை ஆப்ஷனை கொண்டிருக்கலாம். ரேப்டீ முதல் பேட்டரி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்படலாம்.

raptee ebike

இந்த ஆண்டின் துவக்கத்தில் வாகனத் துறை மற்றும் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட R&D அமைப்பின் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு இந்தியாவிடமிருந்து (ARAI) 3.27 கோடி ரூபாய் மானியமாக ராப்டீ பெற்றுள்ளது. AMTIF (Advance Mobility Transformation and Innovation Foundation) தொழில் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தால் மூலதன பொருட்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.