பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் எஸ்.ஜி சூர்யா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகவலைதளத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்துவருபவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை மதுரை போலீஸார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.