Thalapathy 68: விஜய்யின் சம்பளம், அரசியல் என்ட்ரி… சிக்கலில் தளபதி 68… இனிதான் ஆட்டம் ஆரம்பம்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதனிடையே இன்று மாணவர்களை சந்தித்து அவர்களுக்கான கல்வி விருது, ஊக்கத் தொகை கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 படம் தொடங்கும் முன்பே பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிக்கலில் தளபதி 68: விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவுபெறும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அபிஸியல் அப்டேட் வந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கல்வி விருது வழங்கும் விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களில் முதல் மூன்று பேரை தேர்ந்தெடுத்து ஊக்கத் தொகை வழங்கினார் விஜய். இந்நிகழ்ச்சியில் அரசியல் குறித்தும் ஒருசில வார்த்தைகள் பேசிய விஜய் ரசிகர்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளார். இதனால், தமிழ்நாட்டு அரசியல் களமே விஜய்யின் மீது அதிக கவனம் செலுத்திவருகிறது. 2026 தேர்தலில் விஜய் களமிறங்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லியோவில் நடித்து முடித்ததும் உடனடியாக தளபதி 68 படத்தின் சூட்டிங் தொடங்கிவிடலாம் என விஜய் முடிவெடுத்துள்ளாராம். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்து பல பொதுநல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். இன்று நடைபெற்ற கல்வி விருது விழாவிற்காகவும் பல கோடிகளை செலவு செய்துள்ளாராம். அரசியலில் களமிறங்க வேண்டும் என்றால், அதற்கும் பல கோடிகள் தேவைப்படும், அதனால் தான் விஜய் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்யின் படம் வெளியாகும் போது தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது என சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றார்களாம்.

மேலும், இப்போதே தளபதி 68 படத்துக்கு எதிராக பொதுநல வழக்குத் தொடர சிலர் ரெடியாக இருக்கிறார்களாம். இதனால் தளபதி 68 படம் மட்டுமின்றி விஜய்க்கும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கலாம் என பிளான் செய்து வருகிறார்களாம். ஆனால் இவை எதற்கும் அசராத விஜய், லியோ, தளபதி 68, மக்கள் இயக்கம் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பயணிக்கிறாராம்.

அதனால், தளபதி 68 படக்குழுவினரும் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்று நடந்த கல்வி விருது விழாவால் விஜய் குறித்து பலவிதமான தகவல்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டுமே வெளியாகும் எனவும், தளபதி 68 அப்டேட்டுக்கு வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.