ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
டெலிகாம் சந்தையில் முக்கிய போட்டியாளராக இருக்கக்கூடிய Vi நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் 5G அறிமுகம் செய்யப்படாத நிலையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. அதில் 365 நாட்கள் ரீசார்ஜ் திட்டங்கள் பற்றியும் அதன் சலுகைகள் பற்றியும் இந்த பட்டியலில் காணலாம்.
3099 ரூபாய் திட்டம்
இதன் மூலமாக ஒரு நாளைக்கு 2GB டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100SMS வசதி,
Vi Hero Unlimited benefits
நமக்கு கிடைக்கும். வேறு எந்த நிறுவனமும் வழங்காத Binge All Night, Weekend data rollover, Data Delights என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பல வசதிகள் இதில் உள்ளன. மேலும் 50GB கூடுதல் டேட்டா, ஒரு வருட Disney+ Hotstar Mobile திட்டம், Vi Movies & TV VIP Access என பொழுதுபோக்கிற்காக அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.
2,999 ரூபாய் திட்டம்
இந்த வருட திட்டத்தில் மொத்தமாக 850GB Unlimited டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS ஒரு நாளைக்கு, Vi Movies Classic Access, Binge All Night போன்ற சிறப்பு வசதிகளும் கிடைக்கிறது.
2,899 ரூபாய் திட்டம்
இதில் தினசரி 1.5GB டேட்டா நமக்கு கிடைக்கும். மேலும் பிரீமியம் திட்டத்தில் இருக்கும் vi Hero unlimited, Binge All Night, Weekend Data RollOver, Data Delights, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100SMS வசதி, கூடுதலாக 50GB டேட்டா, Vi Movies & TV VIP Access போன்ற சலுகைகள் கிடைக்கிறது.
1,799 ரூபாய் திட்டம்
குறைவான டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கான திட்டமாக இது உள்ளது. இதில் மொத்தமாக 24GB டேட்டா கிடைக்கும். ஆனால் இத தவிர்த்து
அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்
, ஒரு நாளைக்கு 3600SMS வசதி, Vi Movies & TV Basics Access போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்