Vijay: இத எப்ப சொல்ல போறீங்க.. விஜய்யை வம்பிழுத்த ப்ளூ சட்டை: கொந்தளித்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகை விஜய். இவர் இன்று தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது நடிகர் விஜய் மேடையில் பேசிய பல விஷயங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் அவரின் பேச்சை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகர் விஜய் ஏற்பாடு செய்த கல்வி விருது விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. சுமார் 1500 மாணவ, மாணவிகள் த்ங்கஜ்ளது பெற்றோர்களுடன் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர். இதற்காக அவர்கள் தங்க இடம் மற்றும் உணவு விஜய் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவ்விழாவில் நடிகர் விஜய் தனுஷின் ‘அசுரன்’ பட டையலாக்கை மேற்கோள் காட்டி பேசினார். சமீபத்துல வந்த படத்துல, ‘காடு இந்தா எத்துக்குவானுங்க. ரூபா இருந்தா புடுங்கிகுவானுங்க. படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுக்கவே முடியாதுன்னு’ ஒரு அழகான வசனம் வரும். இந்த டையலாக் என்னை ரொம்ப பாதிச்சது. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம் தான் இது என பேசினார்.

மேலும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் வருங்கால தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் நீங்கள் தேர்தலில் பணம் வாங்கி ஓடு போடாதீர்கள். இதனை உங்கள் பெற்றோர்களிடமும் அறிவுறுத்துங்கள் என பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய்யின் இந்த பேச்சுக்கு அவரது ரசிகர்களும் இணையத்தில் பயர் விட்டு வருகின்றனர்.

Adipurush: ‘ஆதிபுருஷ்’ படத்தை இன்ச் பை இன்ச்சாக வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்.!

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விஜய்யின் பேச்சை கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க – கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை.

கட் அவுட், பிளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்டர் ரேட்ல மட்டும் டிக்கெட் வாங்குங்க… இத எப்ப சொல்ல போறீங்க.. கமாண்டர்’ என விஜய்யிடம் கேள்வி எழுப்புவதை போல் பதிவிட்டுள்ளார் மாறன். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவரை வழக்கம் போல கமெண்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Leo First Single: சர்ச்சையில் ‘லியோ’ பட போஸ்டர்: விஜய்க்கு இது முதல் முறை கிடையாது.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.