ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

புதுடெல்லி,

ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் செம்பிலான் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஜூனியர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்யதா ஜே.பி. 2 நிமிடம் 28.861 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 17 வயதான தன்யதா கோவையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஆவார். சீனத்தைபேயின் சாய் ரோக் லீ தங்கப்பதக்கத்தை (2 நிமிடம் 28.239 வினாடி) தட்டிச் சென்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.