ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? வரும் 30-ம் தேதியே பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி தேதி. பான் எண்ணை ஆதாருடன் இணைக்க காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் கடைசியாக இந்த காலக்கெடு வரும் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆதாரை பான் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலும் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
மேலும் நிலுவையில் உள்ள ரீபண்டுகள் மற்றும் வட்டிகள் வராது என்றும், TDS அதிகளவில் கழிக்கப்படும் என்றும், TCS அதிகமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு பான் கார்டு செயலிழந்துவிட்டால், இன்னொரு பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படுமாம்!
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க…
-
https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்திற்குள் செல்லுங்கள்.
-
அதில் ‘Quick link’ என்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள ‘Link aadhar’ என்பதற்குள் சென்று உங்களது பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைத்துக்கொள்ளலாம்.
பான் எண்ணை ஆதாருடன் விரைவில் இணைத்துவிடுங்கள், மக்களே!